இயற்கை நுண்ணறிவு ஆய்வு மையம் - ஆனைகட்டி.
இயற்கை நுண்ணறிவு ஆய்வு மையம் - ஆனைகட்டி.
பொறியாளரான நீங்கள் கண்டுபிடிப்பாளராக மாற அரிய வாய்ப்பு!
ஆனைகட்டி இயற்கை நுண்ணறிவு ஆய்வு மையத்தில் இணைந்து ஆராட்சி மேற்கொள்ளலாம்.
புதிய கண்டுபிடிப்புளை நிகழ்த்தலாம்.
செயற்கை நுண்ணறிவு பற்றி எல்லோருக்கும் தெரியும்.
இயற்கை நுண்ணறிவு பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். ஆனால் முழுமையாக தெரிந்திருக்காது.
இயற்கை நுண்ணறிவு என்றால், இயற்கை விவசாயம், காடுகளை அறிதல், இயற்கையோடு ஒன்றி வாழ்தல் என்பதல்ல அர்த்தம். இயற்கை நுண்ணறிவு என்பது முழுக்க முழுக்க பரிணாமத்துடன் தொடர்புடையது. மனிதன் மட்டுமல்ல, அனைத்து உயிர்களும் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள இயற்கையோடு ஒன்றும் வாழ்வில் தொடர்புடையது.
சுறுக்கமாக சொன்னால்
நமக்கு ஏற்றவாறு சூழலை வளைத்துக்கொள்வது செயற்கை நுண்ணறிவு.
சூழலுக்கு ஏற்றவாறு நம்மை வளைத்துக்கொள்வது இயற்கை நுண்ணறிவு.
உடனே யோகா, தியானம், ஆன்மிகம் என்பதுதான் இயற்கை நுண்ணறிவா என்ற கேள்வி மனதுள் எழலாம். அதற்கும் இயற்கை நுண்ணறிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இயற்கை நுண்ணறிவு என்பது நாம் சிந்திப்பது, யோசிப்பது, யூகிப்பது, கனவு, கற்பனை என்பதல்ல., அதற்கு மாறாக நாம்மை அறியாமலே, நமது உடல் தானக சிந்திப்பதும், செயலாற்றுவதுமான அனிச்சை செயல்!
உதாரணமாக : ஒரு காரை செயற்கை நுண்ணறிவால் இயக்க முடியும். ஆனால் ஒரு காளை வண்டியை இயற்கை நுண்ணறிவால் மட்டுமே இயக்க முடியும்.
செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு துளி நீர் என்றால், இயற்கை நுண்ணறிவு என்பது கடலினும் பெரிது. அத்தகு இயற்கை நுண்ணறிவு பற்றிய ஆய்வுகள் இந்தியாவில் பெயரளவில் கூட இல்லை. ஆனால் வளர்ந்த நாடுகளில் செயற்கை நுண்ணறிவை விட, இயற்கை நுண்ணறிவுக்கு தான் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். அதற்கான ஆய்வுகளும், படிப்புகளும் ஏராளம் உள்ளன.
இந்தியாவில் முதல் முறையாக இயற்கை நுண்ணறிவு கல்வியை அறிமுகப்படுத்துகிறோம். இதற்கான ஆய்வுகளை அடிப்படையில் இருந்து தொடங்குகிறோம். இயற்கை நுண்ணறிவு மீது ஆர்வம் உள்ளவர்கள் இந்த ஆய்வுகளில் கலந்து கொள்ளலாம். செயற்கை நுண்ணறிவு பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு, இயற்கை நுண்ணறிவு கல்வி கூடுதல் பயனுள்ளதாக இருக்கும். புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த இயற்கை நுண்ணறிவு கல்வி உதவும். மாணவர்கள் மட்டுமல்ல, இயற்கை நுண்ணறிவின் மீது ஆர்வம் உள்ள யாரும் இந்த ஆய்வகத்தில் உறுப்பினர் ஆகலாம்.
தனித்தனி தலைப்புகளில் தனித்தனி குழுக்களாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு குழுவிலும் 10 பேர் இடம் பெறுவர். ஆய்வுகளுக்கு தேவையான வழிகாட்டுதலும், ஆய்வக பொருட்களும் வழங்கப்படும். ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகள், மேம்பாடுகள் சர்வதேச ஆய்விதழ்களில் வெளியிடப்படும். பசுமை சூழலில் அமைந்த ஆனைகட்டியில் தங்கும் அறை, உணவு, மலையேற்றம், புல்வெளி ஓய்வு, சிறுவாணி ஆற்றுக்குளியல் என ஒரு அற்புதமான வாய்ப்பு!

Comments
Post a Comment